Sunday, 17 February 2013

பேச நினைக்கும் தருணங்களில்
மௌனம் கொலைக்களன் ....
பிரளயமாய் பிரவாகமெடுக்கக் காத்திருக்கும் என் சொற்களுக்கு
அனுமதியில்லை உன்னிடமிருந்து....
வெகுநேரம் அருகருகே அமர்ந்திருந்தும்
இணக்கம் இல்லாத இருமனம்....
வார்த்தைகளால் வெளிப்படாத உன் சலனம்
தெள்ளத்தெளிவாய் உன் முகத்தில்....
பேச மறுக்கிறாய்...
கேட்கவும் மறுக்கிறாய்...
கேள்விகளும் பதில்களும் இல்லாமல்
கேள்விக்குறியாகிறது நம் உறவு...!

1 comment:

  1. மனதை தொட்ட உந்தன் கவிதையால் நிஜம் மறந்து நினைவுகளில் மூழ்கினேன்...

    ReplyDelete